ஏழைகளுக்கு கிட்டுமா கொவிட்19 தடுப்பு மருந்து?

peoplenews lka

ஏழைகளுக்கு கிட்டுமா கொவிட்19 தடுப்பு மருந்து?

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்தி எமக்காகவா?

அமரிக்கா நாட்டு Pfizer மற்றும் ஜேர்மனிய நாட்டு BioNTech நிறுவனங்களின் இணைந்த தயாரிப்பான புதிய கொராணா தடுப்பூசி மூன்றாவது படிநிலை பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளது. இதற்காக 43,000 மக்கள் வெவ்வேறு நாடுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். முதற் படிக்கல்லை வெற்றிகரமாக அடைந்துவிட்டோம் என்ற இந்த நிறுவனங்களின் அறிக்கை இன்று உலக நாடுகளின் காதுகளுக்கு தேனாக
பாய்ந்துவந்த தகவலாக உள்ளது என்பதில் எந்த மறுப்பும் இல்லை.

தடுப்பூசிகள், வைரஸின் மரபணு குறியீடு (Virus genetic code) ஒன்றினை மனித உடலுக்குள் செலுத்துவதன் மூலம் வெளியில் இருந்து வருகின்ற அதே வகை வைரஸ் தாக்கும் உடலில் பாதிக்கப்படும் கலங்களை அழிக்கும் பிறபொருளெதிரிகளை (antibodies) உருவாக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளுதல்.

ஆக இந்த தடுப்பூசிகள் நிற்சயமாக பாரியளவில் கொரணா தாக்கத்தில் இருந்து வெளிவர உதவும் என்பது உண்மை தான். ஆனால் இங்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நாளுக்கு நாள் உங்களாவிய ரீதியில் அதிகரித்து செல்லும் இந்த கொரணாவினை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகள் உடனடி நிவாரணங்களை வழங்குமா? சாதாரண பாமர மக்களுக்கும் இவற்றினை பெற்றுக்கொள்ள முடியுமா?

Pfizer நிறுவனத்தின் அறிக்கையின்படி முறையான அனுமதி விரைவில் கிடைத்தால் இந்த வருட இறுதிக்குள் 50 மில்லியன் அளவில் இந்த தடுப்பூசிகளை வழங்க முடியும். அது போல் அடுத்த ஆண்டு இறுதியில் 1.3 billion அளவிலான தடுப்பூசிகளை வழங்க முடியும் என்றும் மேலும் கூறியுள்ளார்கள். உலகில் உள்ள சனத்தொகை 7 billion அளவில் உள்ளது இதில் 6 billion க்கு அதிகமானோர் நேரடியாக இந்த கொரோனா நோய் தொற்றின் அபாய வலயத்தில் உள்ளார்கள்.

ஆகவே இந்த நிறுவனத்தினால் மாத்திராம் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் யார் யாரை சென்றடையும் என்பதில் பாரியளவு சந்தேகம் உள்ளது. நிற்சயமாக அமரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளுக்கும் முதல் வருட உற்பத்தியில் மிகப்பாரியளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படும். ஆகவே இன்று நேரடியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாம் வலைய நாடுகளில் வாழும் சாதாரண மக்களுக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசிகள் சென்றடைய குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுக்கும் என்பதே இங்கு மறைந்திருக்கும் உண்மையாகும்.

இந்த மூன்றாம் வலையத்தில் இருக்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் வந்தாலும் முதலில் அதிகாரவர்க்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய முதலாளிவர்க்கம் ஆகியவை முதலில் பயனடைவார்கள். தம்மை காப்பாற்றிய பிறகே மற்றவர்களை காப்பாற்ற முடியும் என்ற வாதமும் கொரோனா தொற்று பயம் இருக்கும் காலத்திலேயே பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் மாத்திரம் வர்த்தகத்தில் உச்சம் அடையச் செய்யும் செயற்பாடும் நடைமுறைக்கு வர முடியும்.

இன்று இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள இந்த இந்த தடுப்பூசிகள் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ்சின் தாக்கத்திற்கு அதிகம் முகம் கொடுத்துள்ள வயோதிபர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் பொதுவாக தடுப்பூசிகள் வயது குறைந்தவர்களுக்கே அதிக வேகமாக செயற்படும். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவது மிக இலகுவாக இருக்கும். ஆனால் வயோதிபர்களுக்கு இவ்வாற்றல் குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்த தடுப்பூசிகள் இவர்களுக்கு ஒருவருக்கு இரண்டு வீதம் வழங்க வேண்டி ஏற்படலாம்.

அவ்வாறு இடம்பெறும் போது இந்த நிறுவனத்தினால் உற்பத்தி அளவு 1.3 billion ஆக அடுத்த ஆண்டு இருந்தாலும் அந்த அளவில் மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆகவே இங்கு agenda 21 இல் உள்ளது போல் நிலையான பொருளாதாரக் (sustainable economy) கொள்கைக்கு உடன்பட்டதாக உலகில் ஒரு குறிப்பிட வர்க்கம் வாழ்வதற்காக மற்றைய வர்க்கம் அழிக்கபட அல்லது அழிந்துவிட அனுமதிக்க முடியும் என்ற நிலை இங்கு உருவாகின்றதா என்ன சந்தேகம் வலுக்கின்றது.

ஆனாலும் ஒரு சந்தோசமான செய்தி இந்த நிறுவனத்தினைப் போன்று மேலும் பத்து மருத்துவ ஆராச்சி நிறுவனங்கள் COVID 19 தடுப்பூசி பரிசோதனையில் முன்றாம் நிலையில் உள்ளார்கள். இவர்களில் குறிப்பட்டளவினர் தங்கள் பரிசோனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அங்கீகாரம் பெற்றுவிட்டார்களாயின் உலகில் உற்பத்தியாகும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக் வாய்ப்பு உள்ளது.

ஆக இப்பொழுது வந்துள்ள தடுப்பூசி மகிழ்ச்சியான செய்தி எமக்கானதல்ல என்பதே வருந்தப்படக்கூடிய உண்மையாகும்.

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது...

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு.. Read More

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்....

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்... Read More

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!...

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன... Read More